யாழ்.பல்கலைக்கழக ஏற்பாட்டில் மீண்டும் கூடிய தரப்புக்கள்! நல்லது நடக்குமா?

இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் சார்பில் அதிகாரமற்ற  பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்டிருந்தனர்.


தீர்மானிக்கும் வலுவற்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்கள் சகிதம் மீண்டும் பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.இதனிடையே பொது முடிவொன்றை எட்டும் வரை ஜனாதிபதி வேட்பாளர்கள் எவருடனும் தமிழ் கட்சிகள் பேரம் பேசக்கூடாதெனவும் மாணவர்கள் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் பேரம் பேசுவதற்கு தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைக்க யாழ்.பல்கலைகழக மற்றும் கிழக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றியங்கள் மேற்கொண்டுள்ள முயற்சியின் அடிப்படையில் இரண்டாம்; கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றிருந்தது.

 இன்று மாலை யாழ்.பல்கலைக்கழகத்தை அண்டிய திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது. இன்றைய பேச்சுவார்தையில் கலந்து கொண்டிருந்த சகல கட்சிகளும் தமிழ் மக்கள் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய ஆவணங்களை சமர்பித்துள்ளன.

அவை மாணவர் ஒன்றியத்தால் தொகுக்கப்பட்டு தனி ஒரு ஆவணமாக தயாரிக்கப்படும். பின்னர் அது சகல கட்சிகளுக்கும் அனுப்பிவைக்கப்படும். அதனடிப்படையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் நடாத்தப்படவுள்ளது. இதேவேளை அடுத்த சந்திப்பு எதிர் வரும் 10ம் திகதி நடைபெறவுள்ளது.

இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் சார்பில் அதிகாரமற்ற  பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இன்றைய சந்திப்பில் கிழக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

புகைப்படங்கள்

 
Support : Eelam5.com | Eelanila.com | Tamilmideanetwork.com
Powered by Eelam5.com
Copyright © 2019. Eelam5.com ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com