தமிழ் மக்கள் உங்களுக்கு என்ன அடிப்படையில் வாக்களிக்க வேண்டும்? - சிவசக்தி ஆனந்தன்


தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்த இரண்டு பிரதான வேட்பாளர்களும் எந்த அடிப்படையில் தமிழ் மக்களிடம் தங்களுக்கு வாக்களிக்குமாறு கோருவார்கள் என சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதனால் வேட்பாளர்களை நிராகரிக்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் , மதத் தலைவர்கள் , சுயாதீன அமைப்புகள் இணைந்து 5 கட்சிகளினால் கொண்டு வரப்பட்ட 13 அம்ச கோரிக்கையானது கடந்த 70 வருட காலம் தீர்க்கப்படாதிருக்கும் முக்கியமான அம்சங்களே அவை.

அவற்றில் அரசியல் தீர்வு தவிர்த்து ஏனையவை யுத்தத்திற்கு பின்னரான நிலைமைகளாகவே உள்ளது. அதாவது அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்குதல், அபிவிருத்தி, வேலை வாய்ப்பு ஆகியன காணப்படுகின்றன.

இவை தனி நாட்டுக்கான கோரிக்கையல்ல. தமிழ் மக்களின் மீதான இன படுகொலை காரணமாக தீர்க்கப்படாதிருக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையிலேயே 13 அம்ச கோரிக்கைகளை வேட்பாளர்களுக்கு கையளிக்க நடவடிக்கையெடுத்தோம்.

ஆனால் பொதுஜன பெரமுன வேட்பாளர் வெளிப்படையாகவே இந்த கோரிக்கைகள் தொடர்பில் எங்களை சந்திக்க தயார் இல்லையென கூறிவிட்டார். அதே போன்று சஜித் பிரேமதாசவும் ஒரு படி மேலே சென்று யாருடைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்படப் போவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான நிலைமையில் தமிழ் மக்கள் உங்களுக்கு என்ன அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்பது தமிழ் மக்களிடம் இருக்கும் கேள்விகளாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

புகைப்படங்கள்

 
Support : Eelam5.com | Eelanila.com | Tamilmideanetwork.com
Powered by Eelam5.com
Copyright © 2019. Eelam5.com ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com